Tag: #KollywoodNews

பறந்து போ திரைப்படம் OTT ரிலீஸ் – ஆகஸ்ட் 5 முதல் JioCinema & Disney+ Hotstar
“பறந்து போ” இந்த வாரம் ஆகஸ்ட் 5 முதல் JioCinema மற்றும் Disney+ Hotstar-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.ராம் இயக்கத்தில், சிவா நடித்த இந்த படம் தந்தை–மகன் உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சி படமாகும்.

ஆகஸ்ட் 22 ரீ-ரிலீஸ் | 34 ஆண்டுகளுக்குப் பிறகும் மாஸ் குறையாத விஜயகாந்த் ‘கேப்டன் பிரபாகரன்’!
1991ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டன்று வெளியான விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’, 300 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படமாகும். ஆர்.கே. செல்வமணி இயக்கிய இப்படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்தார். இளையராஜா இசையமைத்த இந்த படம், பிரம்மாண்டமான பின்னணி இசைக்காகவும், ஆட்டமா தேரோட்டமா பாடலுக்காகவும் பிரபலமானது. இப்போது 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய தொழில்நுட்பத்தில், ஆகஸ்ட் 22-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
‘ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது! பிரபல நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தை ‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜயுடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,