
ஆகஸ்ட் 22 ரீ-ரிலீஸ் | 34 ஆண்டுகளுக்குப் பிறகும் மாஸ் குறையாத விஜயகாந்த் ‘கேப்டன் பிரபாகரன்’!
1991ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டன்று வெளியான விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’, 300 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படமாகும். ஆர்.கே. செல்வமணி இயக்கிய இப்படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்தார். இளையராஜா இசையமைத்த இந்த படம், பிரம்மாண்டமான பின்னணி இசைக்காகவும், ஆட்டமா தேரோட்டமா பாடலுக்காகவும் பிரபலமானது. இப்போது 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய தொழில்நுட்பத்தில், ஆகஸ்ட் 22-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.