கூலி – விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்த கூலி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இப்படம், சென்னையின் ஒரு மேன்ஷனில் வசிக்கும் ரஜினியின் வாழ்க்கை, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் செயல்படும் வில்லன் கும்பலுடன் ஏற்படும் தொடர்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது. கதைச் சுருக்கம்துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நாகர்ஜுனா; அவருக்கு விசுவாசமாக இருப்பவர் சௌபின் ஷாஹீர். இவர்களின் ஆளுகையில் பல குற்றச்சம்பவங்கள்…