சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா ‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17…