Category: நடிகர்கள்
தமிழ் நடிகர்கள் பற்றிய முழுமையான தகவல்கள், புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் சமீபத்திய படங்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கான முழுமையான கையேடு.
ரோபோ சங்கர் மரணம்: சின்னத்திரை நடிகர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) இன்று காலமானார். படப்பிடிப்பில் மயக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு மதியம் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் அவரை சென்னை துரைப்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனைகள் மருத்துவர்கள் பரிசோதித்ததில், நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக கூறினர். சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில்…
ஹேமமாலினி
ஹேமமாலினி இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் “கனவுக் கன்னியாக” ரசிகர்களை வியக்க வைத்தவர், ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்து, இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய அவர், பரதநாட்டிய கலையிலும் சிறந்து விளங்கினார். அனந்தசாமி தயாரித்த “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பல ஆண்டுகள் ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக வளம்வந்த ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: அக்டோபர்…
என். டி. ராமா ராவ்
என். டி. ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக ‘என்.டி.ராமா ராவ்’ என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை…
கிஷோர் குமார்
கிஷோர் குமார் இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 04, 1929 இடம்: கந்த்வா, இந்தியா பணி: பாடகர், நடிகர், இசையமைப்பாளர்,…
மம்முட்டி
மம்முட்டி ‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘மம்முட்டி’, ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகராவார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று, மலையாள திரையுலகின்…
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கீழே காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 13, 1963 பிறப்பிடம்: சிவகாசி, தமிழ்நாடு (இந்தியா) …
மோகன்லால்
மோகன்லால் ‘மோகன்லால் விஸ்வநாதன் நாயர்’ என்ற இயற்பெயர் கொண்ட மோகன்லால் ஒரு புகழ் பெற்ற மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” நான்கு முறையும், ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்று தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர். இத்தகைய சிறப்புப் பெற்றுத்…
சத்யஜித் ரே
சத்யஜித் ரே ‘இந்தியத் திரையுலக மேதை’ எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிபடுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற “ஆஸ்கார் விருதினை” இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக…