Category: முகப்பு

மாதம் ரூ.24.5 லட்சம் வாடகை; ஆமிர் கானும் குடியேறும் வாடகை வீடு
பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மும்பை இல்லம் இப்போது கூடுதல் மாடிகளுடன் நீட்டித்து புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ஷாருக்கான் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இதேபோன்று நடிகர் ஆமிர் கானும் மும்பை பாந்த்ரா பகுதியில்தான் வசித்து வருகிறார். அவர் தற்போது இருக்கும் கட்டடம் மிகவும் பழையதாகிவிட்டது. விர்கோ ஹவுசிங் சொசைட்டி என்ற அக்கட்டடத்தில் ஆமிர் கான் குடும்பத்திற்கு 12 வீடுகள் இருக்கின்றன. இக்கட்டடத்தில் ஆமிர் கான் ஒட்டுமொத்த குடும்பமும் வசிக்கிறது. இக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய…
ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
‘ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் வெளியானது! பிரபல நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தை ‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜயுடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,
அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் குடும்பம், சினிமா பற்றிய அனுபவங்கள்: நாஸ்காம் கூட்டத்தில் பகிர்வு அடுத்த மாதம் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘மதராஸி’ வெளியாகவிருக்கிறது. இதனுடன், தற்போது ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நாஸ்காம் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், தனது குடும்ப வாழ்க்கை, சினிமா, மற்றும் தன்னுடைய பிள்ளைகள் குறித்த பல்வேறு விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்தார். அந்த நிகழ்வின் முழு காணொளி தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. பேச்சில் அவர்…
ஹிந்தியில் பேச மறுத்த கஜோல்
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாலிவுட் நடிகை கஜோல் ஹிந்தியில் பேச மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! மராத்தியிலும், ஆங்கிலத்திலும் பேசிய அவரிடம் நிருபர் ஒருவர் ஹிந்தியில் பேசுமாறு கூறியபோது, “ஹிந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும்” என கோவமாக பதிலளித்தார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்!

வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஏராளம். ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களில் தனி இடம் பிடிக்கின்றன. அந்த வகையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு விளம்பர ரீல், ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.ஹில்டன் ஹோட்டலின் பிரமோஷனுக்காக வெளியான இந்த வீடியோ, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி நிலவரப்படி 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.இதன் மூலம் இந்த ரீல், இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிகமாகப் பார்க்கப்பட்ட ரீல் என்ற பெருமையைப்…

சென்னையிலேயே நடக்கும் மலையாள பிக் பாஸ் ஷூட்டிங்
இரு தினங்களுக்கு முன் தொடங்கியிருக்கிறது மலையாள பிக்பாஸ் சீசன் 7. வழக்கம் போல் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார் மோகன்லால். சர்வதேச அளவில் பிக் பிரதர் என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியே இந்தியில் பிக் பாஸ் என வந்தது. அங்கே அது ஹிட் ஆனதைத் தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளிலும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 9வது சீசன் வரும் அக்டோபரில் தொடங்க உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை கன்னட பிக்பாஸின்…

Tourist Family: – சசிகுமார் குறித்து த்ரிஷா
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான கதையைக் களமாகக் கொண்டிருந்தது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்தைப் பார்த்த பின்னர், படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இதேபோல் நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் படக்குழுவினரைச் சந்தித்து தனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.

வேணும் மச்சா பாடல் ப்ரோமோ வெளியானது
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் பரிதாபங்கள் கோபி சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஓ காட் பியூட்டிபுல் Oh God Beautiful ) என்ற இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில்…