
மாதம் ரூ.24.5 லட்சம் வாடகை; ஆமிர் கானும் குடியேறும் வாடகை வீடு
பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மும்பை இல்லம் இப்போது கூடுதல் மாடிகளுடன் நீட்டித்து புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ஷாருக்கான் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இதேபோன்று நடிகர் ஆமிர் கானும் மும்பை பாந்த்ரா பகுதியில்தான் வசித்து வருகிறார். அவர் தற்போது இருக்கும் கட்டடம் மிகவும் பழையதாகிவிட்டது. விர்கோ ஹவுசிங் சொசைட்டி என்ற அக்கட்டடத்தில் ஆமிர் கான் குடும்பத்திற்கு 12 வீடுகள் இருக்கின்றன. இக்கட்டடத்தில் ஆமிர் கான் ஒட்டுமொத்த குடும்பமும் வசிக்கிறது. இக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய…