ராதிகா அப்டே

ராதிகா அப்டே
07 Sep 1985 (வயது 33)

ராதிகா அப்டே இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2005-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் 2009-ஆம் ஆண்டு பெங்காலி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2012-ஆம் ஆண்டு தமிழில் தோனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமாகியுள்ளார்.
பிறப்பு
இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ள இவர், தமிழகத்திலையே தனது மருத்துவ கல்வியினை கற்றறிந்துள்ளார். இவரது தந்தை புனே-வில் உள்ள ஸஹ்யன்றி மருத்துவமனையில் தலைவராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவ குடும்பத்தில் பிறந்து மருத்துவரான இவர், மருத்துவ துறையில் பெரிதும் ஈடுபாடு இன்றி, திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு 8000 – 10000 சம்பளத்திற்கு தனது தோழிகளுடன் கோரேகான் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.
திரையுலக தொடக்கம்
இவர் ஹிந்தி திரைப்படத்தில் 2005-ஆம் ஆண்டு ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் குறும்படங்களில் பல நடித்துள்ள இவர், தமிழில் 2012-ஆம் ஆண்டு தோனி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வந்துள்ள இவர், கபாலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் பிரபலமானவர்.
இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி பல இணையதள தொடர்களில் நடித்துவருகிறார்.

சித்திரம் பேசுதடி 2  – 2019 ( தமிழ் )
கபாலி  – 2016 ( தமிழ் )
தோனி  – 2012 ( தமிழ் )
ரத்த சரித்திரம்  – 2010 ( தமிழ் ) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *