பிறந்தநாள்19 Jun 1985 (வயது 34)
காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2004-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார்.
பிறப்பு
இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் என்ற தம்பதியினருக்கு மகளாக 1985-ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்துள்ளார். இவருக்கு ஒரு தங்கை உண்டு நிஷா அகர்வால் இவரும் திரைத்துறையில் நடிகையாக நடித்து வருகிறார். தனது கல்வியினை மும்பையிலையே கற்றறிந்த இவர், கல்லூரி காலம் முதல் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார்.
திரைவாழ்க்கை (அறிமுகம் / தொடக்கம்)
காஜல் அகர்வால் மும்பையில் பிறந்துள்ள இவர், திரையுலகில் ஆர்வம் கொண்டு பல விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் 2004-ம் ஆண்டு ஹிந்தியில் “கியூன்! ஹோ கயா நா” என்ற திரைப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யாவின் தோழியாக நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இத்திரைப்படமானது இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இப்படத்திற்கு பின்னர் விளம்பரங்களிலும், மாடெல்லிங் துறையில் பணியாற்றி வந்துள்ள இவர், தெலுங்கு திரையுலகில் “லக்ஷ்மி கல்யாணம்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்டார்.
இவரின் பிரபல திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு
பிரபலம்
இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் தெலுங்கில் சந்தமாமா, பவ்ருடு, ஆட்டாடிஸ்டா என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர், தமிழ் திரையுலகிற்குள் 2008-ம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.
தமிழில் 2008-ம் ஆண்டு பழனி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர், அதே ஆண்டு தமிழில் சரோஜா, பொம்மலாட்டம் என்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார்.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் 2009-ம் ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இத்திரைப்படமானது இவரது திரையுலகிற்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பானது ஆகும்.
இத்திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான கார்த்தியின் “நான் மகான் அல்ல”, சூர்யாவின் “மாற்றான்”, விஜய்யுடன் “துப்பாக்கி, ஜில்லா, மெர்சல்” அஜித்தின் “விவேகம்” ஆகிய திரைப்படங்களில் தமிழ் பிரபல நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வென்று புகழ் பெற்றுள்ளார்.
நடிகை
இந்தியன் 2 – 2021 ( தமிழ் )
கருடா – 2020 ( தமிழ் )
கோமாளி – 2019 ( தமிழ் )
பாரிஸ் பாரிஸ் – 2019 ( தமிழ் )
மொட்ட சிவா கெட்ட சிவா – 2017 ( தமிழ் )
மெர்சல் – 2017 ( தமிழ் )
விவேகம் – 2017 ( தமிழ் )
நான் ஆணையிட்டால் – 2017 ( தமிழ் )
கவலை வேண்டாம் – 2016 ( தமிழ் )
பாயும் புலி – 2015 ( தமிழ் )
மாரி – 2015 ( தமிழ் )
ஜில்லா – 2014 ( தமிழ் )
ஆல் இன் ஆல் அழகு ராஜா – 2013 ( தமிழ் )
துப்பாக்கி – 2012 ( தமிழ் )
மாற்றான் – 2012 ( தமிழ் )
மாவீரன் – 2011 ( தமிழ் )
நான் மகான் அல்ல – 2010 ( தமிழ் )
மோதி விளையாடு – 2009 ( தமிழ் )
பொம்மலாட்டம் – 2008 ( தமிழ் )
சரோஜா – 2008 ( தமிழ் )
பழனி – 2008 ( தமிழ் )