thirukumarbfa@gmail.com

கிஷோர் குமார்

கிஷோர் குமார் இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 04, 1929 இடம்: கந்த்வா, இந்தியா பணி: பாடகர், நடிகர், இசையமைப்பாளர்,…

Read More

மோகன்லால்

மோகன்லால் ‘மோகன்லால் விஸ்வநாதன் நாயர்’ என்ற இயற்பெயர் கொண்ட மோகன்லால் ஒரு புகழ் பெற்ற மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” நான்கு முறையும், ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்று தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர். இத்தகைய சிறப்புப் பெற்றுத்…

Read More

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கீழே காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 13, 1963 பிறப்பிடம்: சிவகாசி, தமிழ்நாடு (இந்தியா) …

Read More

தேவ் ஆனந்த்

தேவ் ஆனந்த் தேவ் ஆனந்த் அவர்கள், இந்திய திரைப்படத் துறையில் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராவார். திரைப்படங்களில் நடிக்கும் போது, தலையசைத்துக் கொண்டே மிக வேகமாக உரையாடல்கள் வழங்கும் அவரது பாணி, புகழ்பெற்ற முத்திரைகள் பதித்து, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், பலராலும் பின்பற்றப்பட்டது. அவர் பல வெற்றிப் படங்களில் நடித்து, பல விருதுகளையும் வென்றுள்ளார். அவர் புகழின் மகுடமாக இருந்த நேரத்தில், அவரது சமகாலத்தவர்கள் மத்தியில் மிகவும் கவர்ச்சியானவராக கருதப்பட்டார். இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பை…

Read More

சத்யஜித் ரே

சத்யஜித் ரே ‘இந்தியத் திரையுலக மேதை’ எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிபடுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற “ஆஸ்கார் விருதினை” இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக…

Read More

தாதாசாஹேப் பால்கே

தாதாசாஹேப் பால்கே தாதாசாஹேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘இலங்கை தகனம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா’ மற்றும் ‘கலிய மார்டான்’ போன்ற 95 திரைப்படங்களையும், 26 குறுந்திரைப்படங்களையும் இயக்கி, இந்திய சினிமாவை உலகளவில் பிரசித்தியடைய செய்தவர். சினிமாவில் தனது வாழ்நாள் பங்களிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு, அவரது பெயரால் ‘தாதாசாஹேப் பால்கே விருதினை’ இந்திய அரசு,…

Read More

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன்…

Read More

பிரித்விராஜ் கபூர்

பிரித்விராஜ் கபூர் பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் ஒரு இளவயது காவல்துறை அதிகாரியின் இளமையான, துருதுருப்பான மற்றும் அழகான மகனான பிரித்விராஜ் கபூர், பாலிவுட்டில் தனது வாழ்க்கையை தொடங்குவதன் நோக்கமாக மும்பைக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இந்திய திரைப்பட துறையில் மிக பிரபலமாக நினைவு கூறப்படும் நடிகர்களில் ஒருவராக திகழப்படுகிறார். அவரது கூர்மையான அறிவும், திறமையான அம்சங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே அவரை இந்திய சினிமாவில் அவரது வழியில் செல்ல முற்பட செய்தது. அவர் உயர்வான…

Read More

ஷாருக்கான்

ஷாருக்கான் ‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். 1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி…

Read More

பிரபுதேவா

பிரபுதேவா பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனப் புகழப்படுகிறார். ஒரு நடன இயக்குனராக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார். ‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’, (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ (தமிழ்),…

Read More