பிறந்தநாள்25 May 1987 (வயது 32)
ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீ திவ்யா ஐதரபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார். மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இவர். கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்தார். இது வெற்றி பெற்றது.
பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போழுது இவர் “பென்சில்” எனும் படத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கொண்டுள்ளார். மேலும் காட்டுமல்லி, நாகர் புரம், எத்தி, வீர தீர சூரன் எனும் தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகை
வீர தீர சூரன் – 2019 ( தமிழ் )
ஒத்தைக்கு ஒத்த – 2019 ( தமிழ் )
சங்கிலி புங்கிலி கதவ தொற – 2017 ( தமிழ் )
பென்சில் – 2016 ( தமிழ் )
பெங்களூர் நாட்கள் – 2016 ( தமிழ் )
மருது – 2016 ( தமிழ் )
காஸ்மோரா – 2016 ( தமிழ் )
மாவீரன் கிட்டு – 2016 ( தமிழ் )
ரெமோ – 2016 ( தமிழ் )
ஈட்டி – 2015 ( தமிழ் )
இஞ்சி இடுப்பழகி – 2015 ( தமிழ் )
காக்கி சட்டை – 2015 ( தமிழ் )
வெள்ளைக்கார துரை – 2014 ( தமிழ் )
ஜீவா – 2014 ( தமிழ் )
வருத்தப்படாத வாலிபர் சங்கம் – 2013 ( தமிழ் )