மதுரைக்காரனாலே இப்படி தான்.
ஒரு நாள் விஜயகாந்த் சாருடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோ வரை வரிசை நின்றிருந்தது. அந்த வரிசையை நான் தான் ஒழுங்குப்படுத்தினேன். அப்போது என்னைப் பற்றி விசாரித்து, “வா… நீ போட்டோ எடுக்கலயா?” என்று கேட்டார். நான், “நான் உங்களை வெச்சு ஒரு படம் எடுக்கணும்” என்று சொன்னேன்.
அவர் சிரித்துவிட்டு, “நினைச்சேன்டா… மதுரைக்காரனாலே இப்படி தான்” என்று சொன்னார்.
அடுத்து அஜித் வைத்து படம் எடுக்கிறேன். அது உளவுத்துறை ரிலீஸாகிறது.
விஜயகாந்த் சாரை வெச்சு எதாவது படம் எடுக்கணுமே என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். சூர்யா படத்தில் யாராவது ஒரு நாள் கெஸ்ட் ரோல் பண்ணனும்னு பேசிக்கொண்டிருந்தாங்க. அப்போ நான் விஜயகாந்த் சாரை பரிந்துரைத்தேன்.
அவர் எப்படி ஒரு நாள் வருவார் என்று கேட்டார்கள். நான், “பேசிப்பார்ப்போம்” என்று கூறினேன்.
அவர்கள் பேசி ஓகே ஆனதும், நான் விஜயகாந்த் அவருடைய வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர், “ஒரு 10 நிமிஷம் கழித்து வா… ஒரு நாள் ஷூட்டுக்காக ஒரு டைரக்டர் கதை சொல்ல வரார்” என்றார். அது நான் தான் என்று நினைத்தேன்.
உடனே அவர், “ஒரு நாளுக்கு நடிக்க மாட்டேன்” என்றார். நான், “நீங்கள் நடிக்கவில்லை என்றால் எப்படி படம்?” என்று கேட்டேன். அவர் 10 நாள் கழித்து தேதி கொடுத்தார்.
அவர் கூறினார்:
“தேவையில்லாம ஏன் காசு செலவு பண்றீங்க! ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல நடிச்சுகிட்டு இருந்தாரு. நான் யூனிட்டேயே கூட்டி சென்றிருந்தேன்.”
நான், “உன்ன யாரு யூனிட்ட கூட்டிட்டு வர சொன்னது?” என்று கேட்டேன். நான், “படம் எடுக்கணும்லணே” என்று கூறினேன்.
அவர் பதிலில், “தேவையில்லாம ஏன் காசு செலவு பண்றீங்க? இங்கேயே ஆளுங்க இருக்காங்கள்ல… நீ, சூர்யா, ரத்னவேல் மட்டும் வாங்க” என்றார்.
அவருடைய ஷூட்டிங்கை மூன்று மணிநேரம் நிறுத்திவிட்டார். ஒரு மணிநேரம் கேப்டன் ஷூட்டிங் எவ்வளவு ஆகும் என்று யோசித்து பாருங்கள்.
நானும் சூர்யாவும் அவருக்கு மாலை போட்டோம். அவர், “எதுக்கு இதெல்லாம்… தேவையில்லாத செலவு?” என்று கேட்டார். அவ்வளவு நல்ல மனிதன் அவர்.
சிங்கம்புலி
மேலும், சிங்கம்புலி தம்பி விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபண்டியன் படத்தில் நடித்ததில் அவர் காசு கேட்டதாக ஒரு புரளி கிளம்பிவிட்டது. நான் அதைப் பற்றி அவரிடம் விளக்கியபோது, அவர்கள் “மலேசியா வர சொன்னார்.”
அங்கே நான் நான்கு நாள் ஷூட்டிங்கிற்காக 16 நாள் அவருடன் இருந்தேன்.
மக்களுக்கு அண்ணனைப் பற்றி தெரியாமல் போய்விட்டது.
அவரை தோல்விகள் வீழ்த்தவில்லை. துரோகம் தான் வீழ்த்தியது.
அவர் விட்டதை விஜயபிரபாகரன் கொண்டு வருவார். எங்கள் அண்ணி பிரேமலதா கொண்டுவருவார்.
விருதுநகர் உங்களை கைவிட்டதுப்போல, எதுவுமே உங்களைக் கைவிடாது என்று கூறினார்.