வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஏராளம். ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களில் தனி இடம் பிடிக்கின்றன.

அந்த வகையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு விளம்பர ரீல், ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஹில்டன் ஹோட்டலின் பிரமோஷனுக்காக வெளியான இந்த வீடியோ, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி நிலவரப்படி 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்த ரீல், இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிகமாகப் பார்க்கப்பட்ட ரீல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது சாதாரண சாதனையல்ல.
இதற்கு முன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா, BGMI விளம்பர ரீல் மூலம் 1.6 பில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தார்.

அதற்கு முன்னர், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் ரீல் 503 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றிருந்தது.
இவை அனைத்தையும் தாண்டி, இந்தப் புதிய ரீல் சாதனையை நிகழ்த்தி, உலகம் முழுவதும் ரசிகர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு எதிர்பார்த்து வருகிறார்கள் என்பதையும் காட்டியுள்ளது.

இவை மட்டுமல்லாமல், தீபிகா படுகோனின் மற்ற சர்வதேச சாதனைகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில், அவர் 2026-ஆம் ஆண்டு ‘Hollywood Walk of Fame’ பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இது ஒரு இந்திய நடிகைக்கு கிடைக்கும் மிக உயர்ந்த அங்கீகாரங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *