ரோபோ சங்கர் மரணம்: சின்னத்திரை நடிகர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) இன்று காலமானார்.

படப்பிடிப்பில் மயக்கம்

மூன்று நாட்களுக்கு முன்பு மதியம் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் அவரை சென்னை துரைப்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவ பரிசோதனைகள்

மருத்துவர்கள் பரிசோதித்ததில், நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக கூறினர். சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.

வெண்டிலேட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

திரையுலகின் இரங்கல்

இந்தச் செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக ஊடகங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னைய உடல்நலப் பிரச்சினைகள்

சில ஆண்டுகளுக்கு முன்பும் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *