’தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது? 

’தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது? – தயாரிப்பாளர் விளக்கம்

பிரபாஸ் நடித்துவரும் ‘தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது என்பதற்கு தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
முன்னதாக பட வெளியீடு திட்டமிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டிசம்பர் 5-ம் தேதி வெளியீடும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பது தயாரிப்பாளரின் பேட்டி மூலம் தெளிவாகிறது.

’தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத், “தெலுங்கு வியாபார நிபுணர்கள் ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தால்
நன்றாக இருக்கும் என்கிறார்கள். அதே சமயத்தில் டிசம்பர் 5-ம் தேதி வந்தால் நன்றாக இருக்கும் என்று இந்தி வியாபார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இன்னும் பாடல்கள் மற்றும் சில காட்சிகள் படப்பிடிப்புக்கு இருக்கிறது.

இப்போது 4:30 மணி நேரக் காட்சிகள் இருக்கின்றன. அதை 2:45 மணி நேரமாக குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அக்டோபரில் முழுமையாக தயார் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறோம். இதன் 2-ம் பாகமும் இருக்கும்.
அக்கதை இதன் தொடர்ச்சியாக இருக்காது. மல்டிவர்ஸ் பாணியில் வித்தியாசமான கதைக் கொண்டதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு சந்தேகம் தான் என்பது தெளிவாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *